Ad Code

Responsive Advertisement

முதியோர் / ஆதரவற்றோர் உதவித் தொகை பெறுவது எப்படி?

முதியோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், உடல் உழைப்புத் திறன் அற்றோர், மகன் / மகள் இருந்தும் ஆதரவின்றி இருப்போர், குறிப்பிட்ட வயதைக் கடந்தும் திருமணமாகாமல் ஆதரவில்லாமல் இருப்போர், ஆதரவற்ற வயது முதிர்ந்த விவசாயிகள், ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர் ஆகியோருக்கு அரசு மாத உதவித் தொகை வழங்குகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்? விவரங்கள் இங்கே


எந்தெந்த திட்டங்களில் யார் யாருக்கு உதவிகள் வழங்கப்படும்?
  • இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதியத் தேசிய திட்டம்:
இதன் கீழ் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும்  40 வயது முதல் 79 வயது வரை உள்ள விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
  • இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியத் தேசிய திட்டம்:
இதன் கீழ் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (18 வயது நிரம்பிய ஆண்வாரிசு இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கப்படும்)
  • இந்திராகாந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் தேசிய திட்டம்:
இதன் கீழ் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் 18 வயது முதல் 79 வயது வரை உள்ள மாற்றுத் திறனுடையோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (ஊனத்தின் தன்மை 80% அல்லது அதற்குமேல் உள்ள கடுமையான அல்லது பலதரப்பட்ட மாற்றுத்திறனுடையோர்)
  • ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்:
இதன் கீழ் 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (வருமானம் ஏதுமில்லாத அல்லது பிழைப்பதற்கு ஆதாரமற்றவர்களாக இருக்கவேண்டும். சொத்து மதிப்பு ரூ.5,000க்கு மேல் இருக்கக்கூடாது. 18 வயது நிரம்பிய ஆண்வாரிசு இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கப்படும்)
  • ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்:
இதன் கீழ் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்றவர்கள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள் அல்லது உரிய நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றவர்களாக இருக்கவேண்டும். (வருமானம் ஏதுமில்லாத அல்லது பிழைப்பதற்கு ஆதாரமற்றவர்களாக இருக்கவேண்டும். சொத்து மதிப்பு ரூ.5,000க்கு மேல் இருக்கக்கூடாது.
18 வயது நிரம்பிய ஆண்வாரிசு இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கப்படும்)
  • ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்:
இதன் கீழ் 18 வயது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாற்றுத் திறனுடையோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (ஊனத்தின் தன்மை 60% இருக்க வேண்டும். பேச்சுத்திறன் அற்றோர்/ செவித்திறன் குறையுடையோர் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். வருமானம் ஏதுமில்லாத அல்லது பிழைப்பதற்கு ஆதாரமற்றவர்களாக இருக்கவேண்டும். சொத்து மதிப்பு ரூ.5,000க்கு மேல் இருக்கக்கூடாது. 20 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது மகனின் மகன் ஆதரவளிக்கக்கூடியவராக இருக்கக்கூடாது.) மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு பரிந்துரை செய்தால் வயது வரம்பு தளர்த்தப்படும்.
  • விவசாயிகள் மற்றும் விவசாயத்  தொழிலாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டம்:
இதன் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (முதுமை காரணமாக உடலுழைப்பு திறன் இல்லாதவராக, மகன் / மகள் இருந்தாலும் அவர்களால் ஆதரவின்றி புறக்கணிக்கப்பட்டவராக, வேறெந்த ஆதரவும் இல்லாதவராக இருக்க வேண்டும்.)
  • 50 வயதினை எய்தியும் வாய்ப்பு வசதியில்லாததால் திருமணமாகாமலிருக்கும் ஏழை, உழைக்கும் திறனற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்:
இதன் கீழ் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருமணமாகாத ஏழைப் பெண்ணுக்கு  ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (உழைக்கும் திறனற்றவராக, வேறுவருமானத்துக்கு வழியில்லாதவராக இருக்க வேண்டும்.)

கிடைக்கும் உதவிகள்:
மேற்கூறிய அத்தனைத் திட்டத்திலும் கீழ்கண்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு ஓய்வூதியதாரர் ஒருவருக்கு ஒரு சேலை இலவசமாக வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் அங்கன்வாடி மையங்களில் அன்றாடம் இலவச சத்துணவு வழங்கப்படும். சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம் 2 கிலோ அரிசியும், சத்துணவு சாப்பிடாதவர்களுக்கு மாதம் 4 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும்.

மாதம் ஒன்றுக்கு ரூபாய் 1000 உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்திலோ அல்லது ஒரு வெள்ளைத்தாளில் எழுதியோ தேவையான விவரங்களுடன் தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அவர்களுக்கு சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலகத்திலும் அளிக்கலாம்.

விண்ணப்பங்களை பரிசீலிக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு: விண்ணப்பம் பெறப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்  மேலும் விவரங்களுக்கு: மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.

குறிப்பு: விண்ணப்பித்துக் கிடைக்க பெறாதவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தீர்வு காண தொடர்புகொள்ளவும்.  இந்தியன் குரல்: 9444305581
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
  • உடல்ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கைகளுக்கு சூ1000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
  • இவர்கள் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவக் குழுவின் மூலம் வயது சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்களாலோ அல்லது வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
  • இவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement